Advertisement

டி20 உலகக்கோப்பை: மேக்ஸ் ஓடவுட் அரைசதம்; முதல் வெற்றியை ருசித்தது நெதர்லாந்து!

டி20 உலகக்கோப்பை: ஜிம்பாப்வேவுக்கு எதிரான சூப்பர் 12 ஆட்டத்தில் நெதர்லாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.

Advertisement
T20 World Cup 2022: A good performance from Netherlands to seal a victory against Zimbabwe in Adelai
T20 World Cup 2022: A good performance from Netherlands to seal a victory against Zimbabwe in Adelai (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Nov 02, 2022 • 12:53 PM

எட்டாவது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இத்தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் நெதர்லாந்து - ஜிம்பாப்வே அணிகள் மோதின. இந்தப்போட்டிக்கான டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
November 02, 2022 • 12:53 PM

இதையடுத்து அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மாதவேரா, எர்வின் ஆகியோர் களம் புகுந்தனர். இதில் மாதவேரா ஒரு ரன்னுக்கும், எர்வின் 3 ரன்னுக்கும், அடுத்து வந்த சகப்வா 5 ரன்னுக்கும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். அந்த அணி 20 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதையடுத்து 4ஆவது விக்கெட்டுக்கு அந்த அணியின் சீனியர் வீரர்கள் சீன் வில்லியம்ஸ், சிக்கந்தர் ராசா ஆகியோர் களம் புகுந்தனர்.

Trending

இதில் பொறுமையாக ஆடி வந்த வில்லியம்ஸ் 28 ரன்னுக்கும், அதிரடியாக விளையாடிய சிக்கந்த ரஸா 40 ரன்னுக்கும், இதையடுத்து களம் புகுந்த மில்டன் ஷூம்பா 2 ரன்னுக்கும் ஆட்டம் இழந்தனர். இதையடுத்து அந்த அணியின் ரியான் பர்ல், லூக் ஜோங்வே ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். இறுதியில் அந்த அணி 19.2 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 117 ரன்களே எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ராசா 40 ரன்னும், வில்லியம்ஸ் 28 ரன்னும் எடுத்தனர். நெதர்லாந்து அணி தரப்பில் பால் வான் மீகெரென் 3 விக்கெட்டும், பிரண்டன் கிளெவர், லீடெ, வான் பீக் தலா 2 விக்கெட்டும், கிளாசென் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து இலக்கை துரத்திய நெதர்லாந்து அணியில் தொடக்க வீரர் ஸ்டீபன் மைபர்க் 8 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். பின்னர் ஜோடி சேர்ந்த மேக்ஸ் ஓடவுட் - டாம் கூப்பர் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 

இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மேக்ஸ் ஓடவுட் அரைசதம் கடந்த கையோடு 52 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து மறுமுனையில் அரைசதம் அடிப்பர் என எதிர்பார்க்கப்பட்ட டாம் கூப்பர் 32 ரன்களோடு பெவிலியனுக்கு நடைக் கட்டினார். 

ஆனாலும் நெதர்லாந்து அணி 18 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 5 விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 12 ஆட்டத்தில் முதல் வெற்றியைப் பெற்று அசத்தியுள்ளது.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement