
T20 World Cup 2022: Hasan makes up for the dropped catch! (Image Source: Google)
எட்டாவது சீசன் டி20 உலகக்கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று அடிலெய்டில் நடைபெற்றுவரும் சூப்பர் 12 ஆட்டத்தில் இந்தியா - வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
இந்திய அணி இதுவரை விளையாடிய 3 ஆட்டங்களில் 2இல் வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் 2அம் இடத்தில் உள்ளது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் முதல் இடத்துக்கு முன்னேறிவிடும். வங்கதேச அணியும், 3 ஆட்டங்களில் 2 வெற்றி, ஒரு தோல்வி என 4 புள்ளிகளுடன் 3ஆம் இடத்தில் உள்ளது.
இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச கேப்டன் ஷாகிப் அல் ஹசன் ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தார். வங்கதேச அணியில் செளமியா சர்காருக்குப் பதிலாக ஷொரிஃபுல் இஸ்லாம் விளையாடுகிறார். இந்திய அணியில் தீபக் ஹூடாவுக்குப் பதிலாக அக்ஷர் படேல் இடம்பெற்றுள்ளார்.