டி20 உலகக்கோப்பை: வீசாவின் போராட்டம் வீண்; சூப்பர் 12 வாய்ப்பை இழந்தது நமீபியா!
டி20 உலகக்கோப்பை: நமீபியாவுக்கு எதிரான வாழ்வா சாவா ஆட்டத்தில் நமீபியா அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து, சூப்பர் 12 வாய்ப்பை இழந்தது.

டி20 உலகக்கோப்பை தொடரின் 8ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் தற்போது சூப்பர் 12 சுற்றில் நுழைவதற்காக தரவரிசையில் கடைசி எட்டு இடங்களில் இருக்கும் அணிகள் கடுமையாக போட்டியிட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக இன்று நடைபெறும் 10ஆவது போட்டியில் நமீபியா - ஐக்கிய அரபு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற யுஏஇ அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
Trending
அதன்படி முதலில் விளையாடிய ஐக்கிய அரபு அமீரகம் 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் சேர்த்தது. அதிரடியாக ஆடிய துவக்க வீரர் முகமது வாசீம் 50 ரன்கள் விளாசினார். விருத்யா அரவிந்த் 21 ரன்கள் சேர்த்தார். கேப்டன் ரிஸ்வான் 43 ரன்களுடனும், பாசில் ஹமீது 25 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இதையடுத்து 149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நமீபியா அணி 16 ரன்கள் எடுப்பதற்குள் இரண்டு விக்கெட்டுகளை இழந்தது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் மைக்கேல் 10 ரன்னிலும், ஸ்டீபன் 4 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
அதன்பின்னர் களமிறங்கிய ஜான் நிக்கோல் (1), கேப்டன் எராஸ்மஸ்(16), கடந்த இரண்டு போட்டிகளிலும் கலக்கிய ஜான் ஃபிரைலிங்க் 14 ரன்களிலும், ஜேஜே ஸ்மித் 3 ரன்களிலும் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினர்.
பின்னர் களமிறங்கிய டேவிட் வைஸ் அதிரடியாக விளையாடி அரைசதம் கடக்க, மறுமுனையில் ருபென் டிரபிள்மேன் ஸ்டிரைக்கை ரொட்டேட் செய்து கொடுத்தார். இதனால் கடைசி இரண்டு ஓவர்களில் நமீபியா வெற்றிக்கு 20 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது.
ஆட்டத்தின் 19ஆவது ஓவரை வீசிய ஸாஹூர் கான் அபாரமாக பந்துவீசி 6 ரன்களை மட்டுமே கொடுத்தார். இதனால் கடைசி ஓவரில் நமீபியாவின் வெற்றிக்கு 14 ரன்கள் தேவை என்ற நிலையில் ஆட்டத்தின் பரபரப்பும் எகிறியது.
ஆனால் 55 ரன்கள் சேர்த்திருந்த டேவிட் வீசா ஆட்டமிழந்து வெளியேற நமீபியாவின் தோல்வியும் உறுதியானது. இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் நமீபியா அணியால் 141 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.
இதன்மூலம் யுஏஇ அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் நமீபியாவை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பெற்றதுடன், உலகக்கோப்பை தொடரில் தங்களது முதல் வெற்றியையும் பெற்றது. அதேசமயம் இத்தோல்வியின் மூலம் நமீபியா அணி சூப்பர் 12 சுற்றுக்கான வாய்ப்பை இழந்து, நெதர்லாந்துக்கு அந்த வாய்ப்பை வங்கியது.
Win Big, Make Your Cricket Tales Now