டி20 உலகக்கோப்பை: முதல் வெற்றியைப் பெற்றது பாகிஸ்தான்!
டி20 உலகக்கோப்பை: நெதர்லாந்துக்கு எதிரான சூப்பர் 12 ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது.
டி 20 உலக கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில் தற்போது சூப்பர் 12 சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இன்று நடைபெறும் 2ஆவது போட்டியில் பாகிஸ்தான், நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய நெதர்லாந்து அணிக்கு பாகிஸ்தான் பந்து வீச்சாளர்கள் துல்லியமாக பந்து வீசி நெருக்குதல் கொடுத்தனர். சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தன. அந்த அணியின் ஆக்கர்மேன் 27 ரன்னும், ஸ்காட் எட்வர்ட்ஸ் 15 ரன்னும் எடுத்தனர்.
Trending
இறுதியில், நெதர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 91 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து 92 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்குகிறது. பாகிஸ்தான் சார்பில் ஷதாப் கான் 3 விக்கெட்டும், முகமது வாசிம் ஜூனியர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் வழக்கம்போல கேப்டன் பாபர் ஆசாம் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். அதன்பின் ஜோடி சேர்ந்த முகமது ரிஸ்வான் - ஃபகர் ஸமான் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர்.
பின் 20 ரன்கள் எடுத்த நிலையில் ஃபகர் ஸமானும் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினாலும், மறுமுனையில் அபாரமாக விளையாடி வந்த முகமது ரிஸ்வான் இந்த டி20 உலகக்கோப்பை தொடரில் தனது முதல் அரைசதத்தைப் பதிவுசெய்வார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் 49 ரன்களில் விக்கெட்டை இழந்து அதனைத் தவறவிட்டார்.
இதன்மூலம் பாகிஸ்தான் அணி 13.5 பாகிஸ்தான் அணி இலக்கை எட்டி, 6 விக்கெட் வித்தியாசத்தில் நெதர்லாந்து அணியை வீழ்த்தி, நடப்பு சீசனில் முதல் வெற்றியைப் பதிவுசெய்தது. நெதர்லாந்து தரப்பில் பிராண்டன் கிளோவர் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
Win Big, Make Your Cricket Tales Now