Advertisement

டி20 உலகக்கோப்பை: ஆஃப்கானை வீழ்த்தியது இங்கிலாந்து!

டி20 உலகக்கோப்பை: ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான சூப்பர் 12 ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

Advertisement
T20 World Cup 2022: Sam Curran's 5-Fer helps England beat Afghanistan by 5 wickets
T20 World Cup 2022: Sam Curran's 5-Fer helps England beat Afghanistan by 5 wickets (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Oct 22, 2022 • 07:53 PM

டி20 உலக கோப்பை தொடரில் சூப்பர் 12 சுற்று போட்டிகள் இன்று தொடங்கின. முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை 89 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
October 22, 2022 • 07:53 PM

பெர்த்தில் நடந்துவரும் அடுத்த போட்டியில் இங்கிலாந்தும் ஆஃப்கானிஸ்தானும் ஆடிவருகின்றன.  டாஸ் வென்ற இங்கிலாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

Trending

முதலில் பேட்டிங் ஆடிய ஆஃப்கானிஸ்தான் அணியில் அதிகபட்சமாக இப்ராஹிம் ஜட்ரான் 32 ரன்களும், உஸ்மான் கனி 30 ரன்களும் அடித்தனர். ஹஸ்ரதுல்லா சேஸாய், ரஹ்மானுல்லா குர்பாஸ், முகமது நபி, நஜிபுல்லா ஜட்ரான் ஆகிய வீரர்கள் ஏமாற்றமளித்தனர். 

ஒருவர் கூட பெரிய இன்னிங்ஸ் ஆடாமல் சொற்ப  ரன்களுக்கு ஆட்டமிழக்க, வெறும் 112 ரன்களுக்கு ஆஃப்கானிஸ்தான் ஆல் அவுட்டானது. இங்கிலாந்து அணியில் அபாரமாக பந்துவீசிய சாம் கரன் அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணியில் கேப்டன் ஜோஸ் பட்லர் 18 ரன்களிலும், அலெக்ஸ் ஹேல்ஸ் 19 ரன்களிலும், டேவிட் மாலன் 18 ரன்னிலு, பென் ஸ்டோக்ஸ் 2 ரன்னிலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர்.

இருப்பினும் அடிக்க வேண்டிய ஸ்கோர் குறைவு என்பதாலும், லியாம் லிவிங்ஸ்டோன் 29 ரன்களைச் சேர்த்ததன் மூலம் இங்கிலாந்து அணி 18.1 ஓவர்களில் இலக்கை எட்டி, 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆஃப்கானிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement