டி20 உலகக்கோப்பை: மிட்செல், வில்லியம்சன் பொறுப்பான ஆட்டம்; பாகிஸ்தானுக்கு 153 டார்கெட்!
டி20 உலகக்கோப்பை: பாகிஸ்தானுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 153 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
எட்டாவது டி20 உலகக்கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதின் குரூப் 1லிருந்து நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகளும், குரூப் 2லிருந்து இந்தியா, பாகிஸ்தான் அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறிய நிலையில், இன்று சிட்னியில் நடைபெற்றுவரும் முதல் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்தும் பாகிஸ்தானும் மோதுகின்றன.
அதன்பின் இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கும் ஃபின் ஆலன், டெவான் கான்வே இணை தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
Trending
பாகிஸ்தான் தரப்பில் முதல் ஓவரை வீசிய ஷாஹின் அஃப்ரிடி நியூசிலாந்து ரசிகர்களுக்கும் அதிர்ச்சிகொடுத்தார். நியூசிலாந்து அணியின் அதிரடி தொடக்க வீரர் ஃபின் ஆலன் 4 ரன்கள் எடுத்த நிலையில் ஷாஹின் அஃப்ரிடி பந்துவீச்சில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்.
அதன்பின் ஜோடி சேர்ந்த டெவான் கான்வே - கேப்டன் கேன் வில்லியம்சன் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பின் டெவான் கான்வே 21 ரன்களில் எதிர்பாராத விதமாக ரன் அவுட்டாகி விக்கெட்டை இழக்க, இத்தொடரில் சதமடித்து அசத்திய கிளென் பிலீப்ஸும் 6 ரன்களோடு பெவிலியன் திரும்பி ஏமாற்றம் தந்தார்.
இதையடுத்து களமிறங்கிய டெரில் மிட்செல், கேன் வில்லியம்சன்னுடன் இணைந்து அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேன் வில்லியம்சன் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் 42 பந்துகளில் ஒரு பவுண்டர், ஒரு சிக்சர் என 46 ரன்களைச் சேர்த்திருந்த கேன் வில்லியம்சன், ஷாஹீன் அஃப்ரிடி பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி பெவிலியனுக்கு திரும்பினார். மறுமுனையில் அதிரடியாக விளையாடிய டேரில் மிட்செல் 32 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்களைச் சேர்த்தது. நியூசிலாந்து தரப்பில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டேரில் மிட்செல் 53 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
Win Big, Make Your Cricket Tales Now