
இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள ஒன்பதாவது ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது இன்றுடன் முடிவடையவுள்ளது. மொத்தம் 20 அணிகள் இத்தொடரில் பங்கேற்றிருந்த நிலையில், தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது பார்படாஸில் நடைபெறவுள்ளது.
இதில் தென் ஆப்பிரிக்க அணியானது வரலாற்றில் முதல் முறையாக உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. அதேசமயம் இந்திய அணியும் கடந்த 2014ஆம் ஆண்டிற்கு பிறகு முதல் முறையாக டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் விளையாடவுள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிப்பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இப்போட்டிக்காக இந்திய அணி வீரர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றனார். இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் ஐடன் மார்க்ரம் இறுதிப்போட்டி குறித்தும், இந்திய அணியை எதிர்கொள்வது குறித்து சில கருத்துக்களை கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய மார்க்ரம், “அநேகமாக, நான் இப்போட்டியை ஒரு புதிய கிரிக்கெட் விளையாட்டாக பார்க்கிறேன். நேர்மையாக கூற வேண்டுமெனில் இந்தியா ஒரு சிறந்த அணி என்பதை நாம் அனைவரும் அறிவோம்.