
T20 World Cup: Group 1 Clash Between Australia and England Abandoned Due To Persistent rain (Image Source: Google)
டி20 உலக கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், மழையால் சில போட்டிகள் ரத்தாவது சுவாரஸ்யத்தை குறைக்கிறது. தென் ஆப்பிரிக்கா - ஜிம்பாப்வே இடையேயான போட்டியில் தென் ஆப்பிரிக்கா ஜெயித்திருக்க வேண்டியது. ஆனால் மழை காரணமாக புள்ளிகள் பகிர்ந்தளிக்கப்பட்டது.
அதன்பின்னர் ஆஃப்கானிஸ்தான் அணி ஆடவேண்டிய 2 போட்டிகள் ரத்தாகியுள்ளன. க்ரூப் 1-ல் இடம்பெற்றுள்ள ஆஃப்கானிஸ்தான் அணி ஒரு போட்டியில் மட்டுமே ஆடியது. இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் ஆஃப்கானிஸ்தான் தோல்வியடைந்த நிலையில், நியூசிலாந்து - ஆஃப்கானிஸ்தான் இடையேயான போட்டி மழையால் ரத்தானது.
இன்று மெல்பர்னில் மழை காரணமாக ஆஃப்கானிஸ்தான் - அயர்லாந்து இடையேயான போட்டியும் ரத்தானது. ஆஃப்கானிஸ்தான் அணிக்கு கிரிக்கெட் ஆடும் கொடுப்பனையே இல்லை. 2 போட்டிகள் ரத்தாகியுள்ளது.