
டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, இங்கிலாந்து ஆகிய 4 அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறின. குரூப் 1ல் முதலிடம் பிடித்த நியூசிலாந்து அணி குரூப் இரண்டில் இடம்பிடித்த பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் அரையிறுதி போட்டி இன்று சிட்னியில் நடக்கிறது.
அதேபோல் குரூப் இரண்டில் முதலிடம் பிடித்த இந்தியா மற்றும் குரூப் ஒன்றில் 2ஆம் இடம்பிடித்த இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2ஆவது அரையிறுதி போட்டி நாளை அடிலெய்டிலும் நடக்கிறது.
இந்தியா - இங்கிலாந்து இடையே அடிலெய்டில் நடக்கும் அரையிறுதி போட்டி கடும் போட்டியாக இருக்கும். இரு அணிகளும் சமபலம் வாய்ந்த அணிகள் என்பதால் போட்டி மிகக்கடுமையாக இருக்கும். இந்திய அணி வங்கதேசத்துக்கு எதிரான போட்டியை அடிலெய்டில் தான் ஆடியது என்பதால் அந்த கண்டிஷனும், ஆடுகளத்தின் தன்மையும் இந்திய அணிக்கு நன்றாக தெரியும்.