
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற வந்த 9ஆவது ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் முன்னாள் சாம்பியனான இந்திய அணியை எதிர்த்து தென் ஆப்பிரிக்க அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இதில் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தென் ஆப்பிரிக்க அணி முதல் முறையாகவும், இந்திய அணி 10 ஆண்டுகளுக்கு பிறகும் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருப்பதால் இதில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைக்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இப்போட்டிக்கான இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் மற்றும் ஃபேண்டஸி லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.
இந்திய அணி
ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியதன் மூலம், மூன்றாவது முறையாக டி20 உலககோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. அதன்படி 2007ஆம் ஆண்டு நடந்த முதல் டி20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்ற இந்திய அணி, அதன்படி கடந்த 2014ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக இறுதிப்போட்டியில் தோல்வியைத் தழுவி இரண்டாவது முறையாக கோப்பையை வெல்லும் வாய்ப்பை தவறவிட்டது.