Advertisement

2011 உலக கோப்பைக்கு பின் இந்திய அணி ஒண்ணும் சாதிக்கல - மைக்கேல் வாகன்!

2011 ஒருநாள் உலக கோப்பையை வென்றதற்கு பின் இந்திய அணி ஒன்றுமே சாதிக்கவிலை என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan November 12, 2022 • 10:57 AM
T20 World Cup: India Are Playing A White-Ball Game That Is Dated, Says Michael Vaughan
T20 World Cup: India Are Playing A White-Ball Game That Is Dated, Says Michael Vaughan (Image Source: Google)
Advertisement

டி20 உலக கோப்பை அரையிறுதி போட்டியில் இங்கிலாந்திடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்த இந்திய அணி தொடரைவிட்டு ஏமாற்றத்துடன் வெளியேறியது. கடைசியாக 2007ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையை வென்ற இந்திய அணியின் அடுத்த கோப்பைக்கான காத்திருப்பு தொடர்கிறது. இந்திய அணிக்கு முன்னாள் கேப்டன் தோனி 2007இல் டி20 உலக கோப்பை, 2011இல் ஒருநாள் உலக கோப்பை மற்றும் 2013இல் சாம்பியன்ஸ் டிராபி ஆகிய 3 கோப்பைகளையும் வென்று கொடுத்தார்.  3 ஐசிசி கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன் என்ற மாபெரும் சாதனைக்கு சொந்தக்காரர் தோனி. 

தோனிக்கு பிறகு இந்த 3 ஐசிசி கோப்பையில் ஒரு கோப்பையை கூட இந்திய அணி வெல்லவில்லை. 2013 சாம்பியன்ஸ் டிராபிக்கு பிறகு ஒரு ஐசிசி கோப்பையை கூட வெல்லவில்லை. 2015 ஒருநாள் உலக கோப்பையில் அரையிறுதியில் தோற்றது. 2014, 2016 டி20 உலக கோப்பைகளிலும் தோற்றது. 2017 சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப்போட்டியில் பாகிஸ்தானிடம் தோற்ற இந்திய அணி, 2019 ஒருநாள் உலக கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்திடம் தோற்று வெளியேறியது. 2021 டி20 உலக கோப்பையில் அரையிறுதிக்குக்கூட தகுதிபெறவில்லை. இந்த டி20 உலக கோப்பையிலும் அரையிறுதியில் இங்கிலாந்திடம் தோற்று வெளியேறியது.

Trending


இந்நிலையில், இந்திய அணி வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் தொடர்ந்து சொதப்பிவரும் நிலையில், இந்திய அணியை கடுமையாக விமர்சித்துள்ளார் இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன். 

இந்திய அணி குறித்து பேசிய மைக்கேல் வாகன், “2011 ஒருநாள் உலக கோப்பைக்கு பின் இந்திய அணி என்ன சாதித்திருக்கிறது? எதுவுமே இல்லை. வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் காலாவதியான ஆட்டத்தை ஆடிவருகிறது. வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் மோசமான ஆட்டத்தை ஆடும் அணியாக திகழ்கிறது. ஐபிஎல்லில் ஆடும் ஒவ்வொரு வீரரும் ஐபிஎல்லால் எவ்வளவு வளர்ந்திருக்கிறோம் என்று கூறுகிறார்கள். ஆனால் இந்தியா ஐபிஎல்லில் இருந்து என்ன பெற்றிருக்கிறது?

திறமையான வீரர்கள் பலர் இருந்தும் டி20 கிரிக்கெட்டில் இந்திய அணி இவ்வளவு மோசமாக ஆடுவதை பார்க்க வியப்பாக இருக்கிறது. நல்ல வீரர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்களை எடுப்பதற்கு நல்ல பிராசஸ் நடப்பதில்லை. இந்திய கிரிக்கெட்டை விமர்சிக்க முன்னாள் ஜாம்பவான்கள், கிரிக்கெட் நிபுணர்கள் பலரும் விரும்புவதில்லை. பிசிசிஐ-யிடமிருந்து கிடைக்கும் வருமானத்திற்கு பங்கம் வந்துவிடும் என்பதற்காக அவர்கள் விமர்சிக்க விரும்பவில்லை. 

ஆனால் இந்திய கிரிக்கெட்டை நேரடியாக விமர்சிக்க வேண்டிய நேரம் இது. சில சிறந்த வீரர்களுக்கு பின் இந்திய அணி ஒளிந்துகொள்கிறது. ஒரு அணியாக ஒன்றிணைந்து சிறப்பாக ஆடுவதில்லை. இந்திய அணியில் பவுலிங் ஆப்சன் மிகக்குறைவு. பேட்டிங் டெப்த் இல்லை. ஸ்பின் பவுலிங்கும் சரியில்லை” என்று விமர்சித்துள்ளார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement