
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தங்களது முதல் போட்டியில் பால் ஸ்டிர்லிங் தலைமையிலான அயர்லாந்து அணியை எதிர்கொள்ளவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது ஜூன் 05ஆம் தேதி நியூயார்க்கில் உள்ள நசாவ் கவுண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றன. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் மோதியுள்ள போட்டிகளில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தினாலும், அயர்லாந்து அணியும் சமீப காலங்களில் சிறப்பான கிரிக்கெட்டை விளையாடி வருவதால் இப்போட்டியின் மீது கூடுதல் எதிர்பார்ப்புகளும் எழுந்துள்ளது. இந்நிலையில், இந்திய அணிக்கு எதிராக அயர்லாந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ஹென்ரிச் மாலன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “டி20 கிரிக்கெட்டைப் பொறுத்தவரையில் உங்கள் அணியில் உள்ள ஏதேனும் இரண்டு வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலே நீங்கள் உலகின் எந்த அணியையும் வீழ்த்த முடியும். இந்திய அணியைப் பொறுத்தவரையில் அவர்கள் ஒரு சிறப்பான ஐபிஎல் தொடருக்கு பிறகு இத்தொடரை எதிர்கொள்கிறது. மேலும் பயிற்சி ஆட்டத்தில் கூட அவர்கள் ஒருசில வீரர்களுக்கு ஓய்வளித்ததை பார்த்துள்ளோம். அதனால் அவர்களின் திட்டங்களுக்கு நாங்கள் தயாராக இருக்க வேண்டும்.