
டி20 உலக கோப்பை ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த உலக கோப்பையில் எதிர்பார்த்தபடியே இந்திய அணி சிறப்பாக ஆடிவருகிறது. பும்ரா ஆடாதது பெரிய பாதிப்பாக அமையும் என அஞ்சப்பட்ட நிலையில், இதுவரை அது பெரிய பாதிப்பாக அமையவில்லை.
சூப்பர் 12 சுற்றின் முதல் போட்டியில் பாகிஸ்தானையும், 2ஆவது போட்டியில் நெதர்லாந்தையும் வீழ்த்தி 4 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் இந்திய அணி, தென்னாப்பிரிக்காவை நாளை பெர்த்தில் எதிர்கொள்கிறது. குரூப் 2இல் மிகச்சிறப்பாக ஆடிவரும் மற்றும் சமபலம் வாய்ந்த இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் நாளை மோதுவதால் இந்த போட்டி மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்திய அணியில் ரோஹித் சர்மா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா ஆகிய 4 பெரிய பேட்ஸ்மேன்களும் நல்ல ஃபார்மில் அருமையாக விளையாடிவருகின்றனர். தொடக்க வீரர் கேஎல் ராகுலின் ஃபார்ம் தான் கவலையளிக்கிறது. ஆனால் டாப் 3இல் ரோஹித்தும் கோலியும் நன்றாக விளையாடுவதால் ராகுல் ஸ்கோர் செய்யாதது பாதிப்பாக அமையவில்லை.