Advertisement
Advertisement

T20 WC 2024: தொடரிலிருந்து விலகிய பிராண்டன் கிங்; கைல் மேயர்ஸை அணியில் சேர்த்தது விண்டீஸ்!

காயம் காரணமாக நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரிலிருந்து விலகிய வெஸ்ட் இண்டீஸ் வீரர் பிராண்டன் கிங்கிற்கு பதிலாக கைல் மேயர்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan June 22, 2024 • 13:22 PM
T20 WC 2024: தொடரிலிருந்து விலகிய பிராண்டன் கிங்; கைல் மேயர்ஸை அணியில் சேர்த்தது விண்டீஸ்!
T20 WC 2024: தொடரிலிருந்து விலகிய பிராண்டன் கிங்; கைல் மேயர்ஸை அணியில் சேர்த்தது விண்டீஸ்! (Image Source: Google)
Advertisement

ஐசிசி ஆடவர்  டி20 உலகக் கோப்பை தொடரில் நேற்று முந்தினம் நடைபெற்ற சூப்பர் 8 சுற்று போட்டியில் இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் இங்கிலாந்து அணியானது 8 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்திருந்தது. இந்நிலையில் இப்போட்டியின் போது வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர் பிராண்டன் கிங் காயம் காரணமாக போட்டியின் பாதியிலேயே பெவிலியன் திரும்பினார்.

மேலும் அவருக்கு ஏற்பட்டுள்ள காயம் குணமடைய சில வாரங்கள் எடுக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளதால், நடப்பு டி20 உலகக்கோப்பை  கிரிக்கெட் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளிலும் பிராண்டன் கிங் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்திருந்தது. இந்நிலையில் நடைபெற்று வரும் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரிலிருந்து பிராண்டன் கிங் விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

Trending


பிராண்டன் கிங்கின் விலகலால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் தற்போது பிராண்டன் கிங்கிற்கு மற்றுவீரராக அதிரடி ஆல் ரவுண்டர் கைல் மேயர்ஸ் வெஸ்ட் இண்டீஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக கடந்த 2020ஆம் ஆண்டு அறிமுகமான கைல் மேயர்ஸ் இதுவரை 37 டி20 போட்டிகளில் விளையாடி 3 அரைசதங்களுடன் 724 ரன்களைச் சேர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

வெஸ்ட் இண்டீஸ் அணி: ரோவ்மேன் பவல், அல்ஸாரி ஜோசப், ஜான்சன் சார்லஸ், ரோஸ்டன் சேஸ், ஷிம்ரான் ஹெட்மையர், ஜேசன் ஹோல்டர், ஷாய் ஹோப், அகீல் ஹொசைன், ஷமர் ஜோசப், குடாகேஷ் மோட்டி, நிக்கோலஸ் பூரன், ஆண்ட்ரே ரஸல், ஷெர்பேன் ரூதர்போர்ட், ரோமரியோ ஷெப்ஃபர்ட்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement
Advertisement
Advertisement