-mdl.jpg)
T20 World Cup: Mohammed Shami To Replace Injured Jasprit Bumrah In Team India; Announces BCCI (Image Source: Google)
டி20 உலக கோப்பை தொடர் வரும் 16ஆம் தேதி தொடங்கி நவம்பர் 13ஆம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. ஆஸ்திரேலியாவில் பயிற்சி போட்டிகளில் விளையாடி இந்திய அணி தீவிரமாக தயாராகிவருகிறது.
டி20 உலக கோப்பையில் ஜடேஜா காயத்தால் ஆடாத நிலையில், இந்திய அணியில் இடம்பெற்றிருந்த ஜஸ்ப்ரித் பும்ராவும் காயத்தால் இந்த தொடரிலிருந்து விலகினார். அவரைத்தொடர்ந்து, ரிசர்வ் வீரராக இருந்த தீபக் சாஹரும் காயத்தால் விலகினார்.
பும்ராவுக்கு மாற்று வீரர் யார் என்ற கேள்வி இருந்துவந்த நிலையில், முகமது ஷமி, முகமது சிராஜ் மற்றும் ஷர்துல் தாகூர் ஆகிய மூவரும் ஆஸ்திரேலியாவிற்கு சென்றனர்.