
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்றுவரும் 9ஆவது ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்து வருகின்றன. இத்தொடரில் நாளை நடைபெறும் 14ஆவது லீக் ஆட்டத்தில் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியை எதிர்த்து ரஷித் கான் தலைமையிலான ஆஃப்கானிஸ்தான் அணியானது பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் ஆஃப்கானிஸ்தான் அணி விளையாடிய முதல் போட்டியிலேயே அபாரமான வெற்றியைப் பதிவுசெய்து அசத்திய உத்வேகத்துடன் இப்போட்டியை எதிர்கொள்கிறது. மறுபக்கம் நியூசிலாந்து அணி நடப்பு உலகக்கோப்பை தொடரில் முதல் போட்டியை விளையாடவுள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன், “ஆஃப்கானிஸ்தான் அணி ஒவ்வொரு ஆண்டும் வளர்ந்து வளர்ந்து வரும் ஒரு அணியாகும். மேலும் அந்த அணியில் உள்ள சில வீரர்கள் உலகம் முழுவதும் டி20 கிரிக்கெட்டில் விளையாடி தங்கள் திறனை வெளிப்படுத்தி வருவதுடன், உலகின் பல்வேறு வீரர்களின் திறன்கள் குறித்தும் நன்கு அறிந்திருக்கிறார்கள்.