ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: இந்தியா vs தென் ஆப்பிரிக்கா போட்டி மழையால் பாதிக்க வாய்ப்பு!
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் மோதவுள்ள நிலையில், இப்போட்டிக்கு மழை அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது ரசிகர்களை அதிருப்தியடைச் செய்துள்ளது.

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வரும் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்ற இத்தொடரில் இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இந்தியா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறி அசத்தின. இதில் தென் ஆப்பிரிக்க அணி ஆஃப்கானிஸ்தானை வீழ்த்தியும், இந்திய அணி இங்கிலாந்தை வீழ்த்தியும் இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளன.
இந்நிலையில் நாளை நடைபெறும் இத்தொடரின் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை எதிர்த்து இந்திய அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இதில் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தென் ஆப்பிரிக்க அணி முதல் முறையாகவும், இந்திய அணி 10 ஆண்டுகளுக்கு பிறகும் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருப்பதால் இதில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைக்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையேயான இந்த இறுதிப்போட்டியானது பார்படாஸில் உள்ள கெனிங்ஸ்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ள நிலையில், இப்போட்டி மழையாக பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதன்படி நாளை பார்படாஸில் மழை பெய்வதற்கு 99 சதவீத வாய்ப்புள்ளதாக வானிலை அறிக்கைகள் தெரிவிக்கின்றன. முன்னதாக இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதிய அரையிறுதி போட்டியிலும் மழை குறுக்கிட்டு ஆட்டம் தமதமானது குறிப்பிடத்தக்கது.
Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy
இருப்பினும் இறுதிப்போட்டிக்கு ரிஸர்வ் டேவாக ஜூன் 30ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ரிஸர்வ் டேவிலும் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக வானிலை அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இதனால் ரசிகர்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர். ஒருவேளை ரிஸர்வ் டேவிலும் போட்டியை நடத்த முடியாத பட்சத்தில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க என இரு அணிகளும் கூட்டு சம்பியன்களாக அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now