
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் லீக் சுற்றுகள் முடிவடைந்து அடுத்ததாக அரையிறுதி போட்டிகள் நடைபெறவுள்ளது. புள்ளிப்பட்டியலில் 8 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்த இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. அதன்படி வரும் நவம்பர் 10ஆம் தேதியன்று அரையிறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்ளவுள்ளது. இந்த போட்டி அடிலெய்டில் உள்ள மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்த போட்டிக்கான பிளேயிங் 11 குறித்த விவாதம் தான் தற்போது சூடுபிடித்துள்ளது. இந்த தொடரின் தொடக்கத்தில் இருந்தே தினேஷ் கார்த்திக் - ரிஷப் பந்த் ஆகியோரிடையேயான போட்டி இருந்து வருகிறது. இதில் தினேஷ் கார்த்திக் தான் பிளேயிங் 11இல் இடம்பிடித்தார். ஆனால் அவரால் பெரியளவில் சோபிக்க முடியவில்லை. இதனையடுத்து ரிஷப் பந்துக்கு கடந்த ஜிம்பாப்வே போட்டியின் போது வாய்ப்பு தரப்பட்டது. ஆனால் சொற்ப ரன்களுக்கு நடையை கட்டினார்.
டி20 கிரிக்கெட்டில் சொதப்பி வரும் ரிஷப் பந்த், கிடைத்த வாய்ப்பிலும் சொதப்பியதால் அடுத்து வரும் போட்டிகளில் வாய்ப்பு கிடைக்குமா என்ற குழப்பம் எழுந்துள்ளது. மற்றொருபுறம் தினேஷ் கார்த்திக்கிற்கு முன்கூட்டியே களமிறங்க வாய்ப்பு கிடைத்தாலும் அவர் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இதனால் ரோகித் என்ன முடிவு எடுப்பார் என குழப்பம் ஏற்பட்டுள்ளது.