
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஜூன் மாதம் 1ஆம் தேதி முதல் அமெரிக்காவில் கோலாகலமாக தொடங்க உள்ளது. இத்தொடரின் இறுதிப்போட்டி ஜூன் 29ஆம் தேதி வெஸ்ட் இண்டீஸில் உள்ள பார்படாஸ் நகரில் நிறைவுபெறும் என்று ஐசிசி தெரிவித்துள்ளது. இந்த உலகக் கோப்பையின் முதல் ஆட்டத்தில் தொடரை நடத்தும் அமெரிக்கா மற்றும் கனடா அணிகள் மோதுகின்றன.
தொடரில் அதிகம் எதிர்பார்க்கப்படும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையேயான போட்டி ஜூன் 9ஆம் தேதி நியூ யார்க் நகரில் நடைபெற இருக்கிறது. தொடரில் இந்திய அணி க்ரூப் ஏ-வில் இடம்பெற்றுள்ளது. இந்தியாவுடன் பாகிஸ்தான், அமெரிக்கா, கனடா மற்றும் அயர்லாந்து அணிகளும் இடம்பெற்றுள்ளன.
இந்தியாவின் அனைத்து லீக் போட்டிகளுமே அமெரிக்காவின் நியூயார்க் மற்றும் ஃப்ளோரிடா நகரில் இரவு 8.30 மணிக்கு (இந்திய நேரப்படி) நடைபெற உள்ளது. இந்த டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் அரையிறுதி போட்டி ஜூன் 26 மற்றும் 27ஆம் தேதிகளில் நடைபெற இருக்கிறது. பார்படோஸ்-ல் ஜூன் 29ஆம் தேதி இறுதிப் போட்டி நடைபெற இருக்கிறது.