டி20 உலகக்கோப்பை: ஐசிசியின் மிகவும் மதிப்புமிக்க அணியில் விராட், சூர்யா!
டி20 உலகக் கோப்பைப் போட்டியில் சிறப்பாக விளையாடிய வீரர்களைக் கொண்ட மிகவும் மதிப்புமிக்க அணியை ஐசிசி அறிவித்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று முடிந்த 8ஆவது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வென்று உலகக் கோப்பையைக் கைப்பற்றியது இங்கிலாந்து அணி.
மெல்போா்ன் நகரில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் முதலில் பாகிஸ்தான் 20 ஓவா்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 137 ரன்கள் சோ்க்க, அடுத்து இங்கிலாந்து 19 ஓவா்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 138 ரன்களை எடுத்து உலக சாம்பியன் ஆனது. மேலும் இப்போட்டியின் ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் என இரு விருதுகளை இங்கிலாந்து ஆல்ரவுண்டர் சாம் கரண் வென்றார்.
Trending
இந்நிலையில் இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய வீரர்களைக் கொண்டு ஓர் உத்தேச அணியைத் தேர்வு செய்துள்ளது ஐசிசி. அந்த அணியில் இந்திய வீரர்களான விராட் கோலியும் சூர்யகுமார் யாதவும் இடம்பெற்றுள்ளார்கள்.
ஐசிசி மிகவும் மதிப்புமிக்க அணி: அலெக்ஸ் ஹேல்ஸ் (இங்கிலாந்து), ஜோஸ் பட்லர் (இங்கிலாந்து), விராட் கோலி (இந்தியா), சூர்யகுமார் யாதவ் (இந்தியா), கிளென் பிலீப்ஸ் (நியூசிலாந்து), சிக்கந்தர் ரஸா (ஜிம்பாப்வே), சதாப் கான் (பாகிஸ்தான்), சாம் கரண் (இங்கிலாந்து), ஆண்ட்ரிச் நோர்ட்ஜே (தென் ஆப்பிரிக்கா), மார்க் வுட் (இங்கிலாந்து), ஷாஹீன் அஃப்ரிடி (பாகிஸ்தான்)
12ஆவது வீரர்: ஹர்திக் பாண்டியா (இந்தியா)
Win Big, Make Your Cricket Tales Now