நாங்கள் பீல்டிங்கில் கோட்டை விட்டோம் - கேன் வில்லியம்சன்!
இத்தோல்வியிலிருந்து நகர்வது கடினமாக இருந்தாலும் நாங்கள் அடுத்த போட்டிகாக எங்களை தயார்செய்துகொள்ள வேண்டும் என நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார்.
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து மற்றும் அஃப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி நியூசிலாந்து அணியை 84 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தது. சர்வதேச டி20 போட்டிகளில் நியூசிலாந்துக்கு எதிராக ஆப்கானிஸ்தான் பெறும் முதல் வெற்றி இதுதான்.
இந்நிலையில் இப்போட்டியில் அடைந்த தோல்விகுறித்து பேசிய நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன், “இப்போட்டியில் வெற்றிபெற்ற ஆஃப்கானிஸ்தான் அணிக்கு என் வாழ்த்துக்கள். அவர்கள் எல்லா வகையிலும் எங்களை விட சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த பிட்ச்சில் நீங்கள் நல்ல ஸ்கோரை பெறுவதற்கு விக்கெட்டை கையில் வைத்து சிறப்பாக விளையாடினார்கள். நாங்கள் இந்த தோல்வியை மறந்து விட்டு அடுத்த போட்டிக்கு விரைவாக தயாராக வேண்டும்.
Trending
இந்தப் போட்டிக்காக எங்கள் அணியில் உள்ள அனைத்து வீரர்களும் கடினமாக உழைத்துள்ளனர். அதனால் இத்தோல்வியிலிருந்து நகர்வது கடினமாக இருந்தாலும் நாங்கள் அடுத்த போட்டிகாக எங்களை தயார்செய்துகொள்ள வேண்டும். இந்த மைதானத்தில் 160 ரன்கள் கடினமாக இழக்கு தான். நாங்கள் இந்த இலக்கைத் துரத்தும் பொழுது எங்களுக்கு நல்ல பாட்னர்ஷிப் தேவைப்பட்டது. ஆனால் எங்களுக்கு அது கிடைக்கவில்லை. மேலும் பந்துவீச்சில் முதல் 10 ஓவர்களில் நாங்கள் பீல்டிங்கில் கோட்டை விட்டோம்.
எங்கள் வாய்ப்புகளை நாங்கள் பயன்படுத்தவில்லை, அது போட்டியின் முடிவை மாற்றிவிட்டது.நாங்கள் இதைவிட சிறந்தவர்கள் என்பது எங்களுக்கு தெரியும். நாங்கள் இதை விட்டு விலகிச் சென்று அடுத்த போட்டிக்கு தயாராக வேண்டும். அதே சமயத்தில் ஆஃப்கானிஸ்தான் அணியின் பேட்டர்கள் நல்ல ஸ்கோரை அடித்ததுவுடன், அவர்களது பந்துவீச்சாளர்கள் அதனை பயன்படுத்தி தங்கள் திறமைகளை சிறப்பாக செயல்படுத்தினர்” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now