
இந்தியா - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரானது ஹராரேவில் நடைபெற்று முடிந்துள்ளது. இதில் நடைபெற்ற முதல் நான்கு டி20 போட்டிகளில் முடிவில் இந்திய அணி மூன்றில் வெற்றிபெற்று 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றிய நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டியானது நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி சஞ்சு சாம்சனின் அதிரடியான அரைசதத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்களைச் சேர்த்தது.
இதனையடுத்து 168 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஜிம்பாப்வே அணி இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த அணியில் தியான் மேயர்ஸ் 34 ரன்களை அடித்ததைத் தவிர்த்து மற்ற வீரர்கள் யாரும் பெரிதளவில் சோபிக்கவில்லை. இதனால் ஜிம்பாப்வே அணி 18.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 125 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் முகேஷ் குமார் 4 விக்கெட்டும் சிவம் துபே 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் இந்திய அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில் இப்போட்டி முடிந்து பேசிய சஞ்சு சாம்சன், “நாங்கள் இப்போட்டியின் தொடக்கத்திலேயே மூன்று விக்கெட்டுகளை இழந்திருந்தோம். அதனால் ரியான் பராக்குடன் ஒரு பார்ட்னர்ஷிப்பை உருவாக்குவது எனக்கு மிகவும் முக்கியமானதாக இருந்தது, அதை நாங்கள் செய்தோம். அதன் மூலமாக நாங்கள் எங்களுக்கு தேவையான இலக்கையும் எட்டினோம். அதன்பின் எங்கள் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசினர். நேர்மையாக கூற வேண்டும் எனில் நீங்கள் அவர்களுக்கு குழுவின் பிணைப்பு குறித்து இதைவிட அதிகம் கற்பிக்க முடியாது. ஏனெனில் நீங்கள் நிச்சயமாக அவர்களைச் சுற்றி இருக்க முடியும் மற்றும் அவர்களுடன் ஒட்டிக்கொள்ள முடியும்.
Reactions & celebrations!
— BCCI (@BCCI) July 15, 2024
That's a Wrap from Zimbabwe! #TeamIndia | #ZIMvIND pic.twitter.com/ZjrUw2Hns2