
கடந்தாண்டு மார்ச் மாதம் ஆஸ்திரேலியா அணி ஆஃப்கானிஸ்தான் அணியுடன் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட இருந்தது. மேலும் இத்தொடரானது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படவும் இருந்தது. ஆனால் ஆஃப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியைப்பிடித்த பின் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு உரிய கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், அதை எதிர்க்கும் விதமாக ஆஃப்கானிஸ்தான் அணியுடனான தொடரை ரத்து செய்தது.
இந்நிலையில் ஆஸ்திரேலியா - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் ஆகஸ்ட் மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த டி20 தொடரையும் ஆஸ்திரேலிய அணி ரத்து செய்வதாக சமீபத்தில் அறிவித்தது. அதன்படி, ஆஃப்கானிஸ்தானில் பெண்களுக்கான மனித உரிமைகள் சீரழிந்து வருவதைக் காரணம் காட்டி அந்நாட்டு அணிக்கு எதிரான டி20 தொடரை ஒத்திவைப்பதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
இதையடுத்து ஆஸ்திரேலியாவின் இந்த முடிவுக்கு ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பதில் கருத்தினை தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆஃப்கானிஸ்தானில் விளையாட்டின் முக்கியத்துவம் மற்றும் ஆப்கானிஸ்தான் தேசத்தின் மகிழ்ச்சி ஆகியவற்றின் தொடர்பைக் கருத்தில் கொண்டு கிரிக்கெட்டில் அரசியல் தலையீட்டை தவிர்க்க வேண்டும்.