
Taijul's Fifer Helps Bangladesh Clean-Sweep The ODI Series Against West Indies (Image Source: Google)
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்துவரும் வங்கதேச அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடிவருகிறது. இதில் முதலிரண்டு போட்டிகளிலும் வங்கதேச அணி வெற்றிபெற்று தொடரை வென்றது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று கயானாவில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஷாய் ஹோப், பிராண்டன் கிங், ஷமாரா ப்ரூக்ஸ் ஆகியோர் ஒற்றையிலக்க ரன்களுடன் பெவிலியனுக்கு நடையைக் கட்டி ஏமாற்றமளித்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த கேசி கார்ட்டி - நிக்கோலஸ் பூரன் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய பூரன் அரைசதம் அடித்தார்.