
வங்கதேச அணியானது இம்மாதம் 17ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. அதன்பின் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது.
இதில் பாகிஸ்தான் - வங்கதேச அணிகளுக்கு இடையேயான இந்த டி20 தொடரானது எதிர்வரும் மே 25ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. இத்தொடர்களை முடித்த கையோடு வங்கதேச அணியானது இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களிலும் விளையாடவுள்ளதாக இன்று அறிவிக்காப்பட்டுள்ளது.
இந்நிலையில் இத்தொடர்களுக்கு முன்னதாக வங்கதேச அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்த் வீச்சாளர் ஷான் டைட் நியமிக்கப்படுவதாக வங்கதேச கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. முன்னதாக நியூசிலாந்தின் ஆண்ட்ரே ஆடம்ஸ் வங்கதேச அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக செயல்பட்டு வந்த நிலையில், அவரை நீக்கி தற்போது ஷான் டைட் புதிய பயிற்சியாளராக செர்க்கப்பட்டுள்ளார்.