
'Talented' Ravi Bishnoi Has A Bright Future, Says Skipper Rohit Sharma (Image Source: Google)
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டி கொண்ட டி20 தொடரில் இந்தியா 1-0 என முன்னிலை பெற்றது.
இந்திய அணியில் ரவி பிஷ்னோய், ஹர்சல் படேல் தலா 2 விக்கெட்டுகளையும் புவனேஷ் குமார், தீபக் சகார், சஹால் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். இதில் ரவி பிஷ்னோய் 4 ஓவர்கள் வீசி 17 ரன்கள் விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இது குறித்து போட்டி நிறைவுக்கு பின்னர் பேசிய இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா “பிஷ்னோய் மிகவும் திறமையான வீரர். அதனால்தான் நாங்கள் அவரை உடனடியாக அணியில் சேர்த்தோம். அவரிடம் வித்தியாசமான ஒன்றைக் காண்கிறோம். அவரிடம் நிறைய மாறுபாடுகள் மற்றும் திறமைகள் உள்ளன.