
இங்கிலாந்து மகளிர் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணியானது வெற்றிபெற்று தொடரில் முன்னிலைப் பெற்றிருந்த நிலையில், இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று பெல்ஃபெஸ்டில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு தொடக்க வீராங்கனை டாமி பியூமண்ட் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் சதமடித்தும் அசத்தினார். அவருக்கு துணையாக விளையாடிய ஃபிரேயா கெம்ப் அரைசதம் கடந்தும் அசத்த, அந்த அணி இன்னிங்ஸ் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 320 ரன்களை குவித்தது. இதில் அதிகபட்சமாக டாமி பியூமண்ட் 150 ரன்களையும், ஃபிரெயா கெம்ப் 65 ரன்களையும் சேர்த்தனர்.
இதனையடுத்து இமாலய இலக்கை நோக்கி விளையாடிய அயர்லாந்து மகளிர் அணியில் தொடக்க வீராங்கனை ரேய்மண்ட் 22 ரன்களைச் சேர்த்தார். அதேசமயம் மறுமுனையில் களமிறங்கிய கேப்டன் கேபி லூயிஸ், ஏமி ஹண்டர், ஓர்லா பிரெண்டர்காஸ்ட், லியா பால், அர்லீன் கெல்லி, ஆலிஸ் டெக்டர் என நட்சத்திர வீராங்கனைகள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.