Advertisement
Advertisement
Advertisement

ஐபிஎல் 2024: ஆடம் ஸாம்பாவிற்கு பதிலாக தனுஷ் கோட்யானை தேர்வு செய்தது ராஜஸ்தான் ராயல்ஸ்!

ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய ஆடம் ஸாம்பாவிற்கு பதிலாக தனுஷ் கோட்யானை ஒப்பந்தம் செய்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.

Bharathi Kannan
By Bharathi Kannan March 22, 2024 • 14:03 PM
ஐபிஎல் 2024: ஆடம் ஸாம்பாவிற்கு பதிலாக தனுஷ் கோட்யானை தேர்வு செய்தது ராஜஸ்தான் ராயல்ஸ்!
ஐபிஎல் 2024: ஆடம் ஸாம்பாவிற்கு பதிலாக தனுஷ் கோட்யானை தேர்வு செய்தது ராஜஸ்தான் ராயல்ஸ்! (Image Source: Google)
Advertisement

ஐபிஎல் என்றழைக்கப்பட்டும் இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் திருவிழாவின் 17ஆவது சீசன் இன்று முதல் கோலாகலமாக தொடங்கவுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் தற்போதிலிருந்தே தொடங்கிவிட்டன. அதற்கேற்றவகையில் அனைத்து ஐபிஎல் அணிகளும் தீவிரமாக இத்தொடரை எதிர்கொள்ள தயாராகி வருகின்றன. 

இந்நிலையில் சஞ்சு சாம்சன் தலைமையில் மீண்டும் களமிறங்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் நடப்பு ஐபிஎல் சீசனில் கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்கவுள்ளது. இதற்காக அந்த அணி கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகிறது. இந்நிலையில் தனிப்பட்ட காயம் காரணமாக நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஸாம்பா நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளார். 

Trending


இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பின்னடைவை சந்தித்துள்ளது. ஏற்கெனவே அந்த அணியின் முக்கிய வேகப்பந்துவீச்சாளர் பிரஷித் கிருஷ்ணா காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய நிலையில், தற்போது ஆடம் ஸாம்பாவும் தனிப்பட்ட காரணங்களுக்காக நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளது அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தொடரிலிருந்து விலகிய ஆடம் ஸாம்பாவிற்கு பதிலாக நடப்பு ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய மும்பை அணியின் ஆல் ரவுண்டர் தனுஷ் கோட்யானை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி அவரது அடிப்படை தொகையான ரூ.20 லட்சத்திற்கு ராஜஸ்தான் ரயால்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளதாக ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது. 

ராஜஸ்தான் ராயல்ஸ்: சஞ்சு சாம்சன் (கேப்டன்), ஜோஸ் பட்லர், ஷிம்ரான் ஹெட்மையர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், துருவ் ஜூரல், ரியான் பராக், டொனோவன் ஃபெரீரா, குணால் ரத்தோர், ரவிச்சந்திரன் அஷ்வின், குல்தீப் சென், நவ்தீப் சைனி, பிரசித் கிருஷ்ணா, சந்தீப் சர்மா, டிரெண்ட் போல்ட், யுஸ்வேந்திர சாஹல்,அவேஷ் கான், ரோவ்மேன் பவல், ஷுபம் துபே, டாம் கோஹ்லர்-காட்மோர், அபித் முஷ்டாக், நந்த்ரே பர்கர்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement