விராட், சூர்யா விக்கெட்டை வீழ்த்திய தன்ஸிம் ஹசன் - வைரலாகும் காணொளி!
இந்திய அணிக்கு எதிரான சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் வங்கதேச அணி வீரர் தான்ஸிம் ஹசன் ஷாகிப் அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்திய காணொளி வைரலாகி வருகிறது.
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஆண்டிகுவாவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு ரோஹித் சர்மா - விராட் கோலி இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர்.
இருவரும் இணைந்து அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாச அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. அதன்பின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரோஹித் சர்மா 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 23 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் ஷாகிப் அல் ஹசன் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ரிஷப் பந்த் ஒரு பக்கம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த மறுமுனையில் விராட் கோலி அதிரடியாக விளையாடினார்.
Trending
இதில் அரைசதம் அடிப்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி ஒரு பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 37 ரன்கள் எடுத்த நிலையில் தன்ஸித் ஹசன் ஷாகிப் பந்துவீச்சில் க்ளீன் போல்டாகினார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்தாலும், மூன்றாவது பந்திலேயே விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்.
இதனால் இந்திய அணியானது 10 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 87 ரன்களைச் சேர்த்தது. இந்நிலையில் இப்போட்டியில் வங்கதேச அணி வேகப்பந்து வீச்சாளர் தன்ஸிம் ஹசன் ஷாகிப் தனது ஒரே ஓவரில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பந்த் மற்றும் சூர்யகுமார் ஆகியோரது விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்திய காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Win Big, Make Your Cricket Tales Now