
பங்களதேஷ் பிரீமியர் லீக் டி20 தொடரின் நடப்பு சீசன் வங்கதேசத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 5ஆவது லீக் போட்டியில் தர்பார் ராஜ்ஷாஹி - தாக்கா கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற தாக்க்கா கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து ராஜ்ஷாஹி அணியை பந்துவீச அழைத்தது. அதன்பாடி தாக்கா கேப்பிட்டல்ஸ் அணியானது தொடத்த்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இருப்பினும் ஷஹாதத் ஹொசைன் திபு அரைசதம் கடந்ததுடன் 50 ரன்களையும், ஸ்டீவி எஸ்கினாசி 46 ரன்களையும் சேர்த்து அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தனர். இதன்மூலம் தாக்கா கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 174 ரனகளைச் சேர்த்தது. ராஜ்ஷாஹி அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய தஸ்கின் அஹ்மத் 7 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய தர்பார் ராஜ்ஷாஹி அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் முகமது ஹாரிஸ் 12 ரன்னிலும், ஜிஷன் அலாம் ரன்கள் ஏதுமின்றியும், யஷிர் அலி 22 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர். இருப்பினும் அதன்பின் இணைந்த கேப்டன் மொமினுல் ஹக் 73 ரன்களையும், ரியான் பர்ல் 55 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் தர்பார் ராஜ்ஷாஹி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.