
Team Abu Dhabi beat Delhi Bulls by 6 wkts (Image Source: Google)
டி10 கிரிக்கெட் லீக் தொடரில் இன்று நடைபெற்ற 13ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி புல்ஸ் - டீம் அபுதாபி அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இதில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி புல்ஸ் அணி 10 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 121 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக ரோமெரியோ செஃபெர்ட் 39 ரன்களைச் சேர்த்தார்.
அதன்பின் இலக்கைத் துரத்திய டீம் அபுதாபி அணிக்கு பிலிப் சால்ட் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தார். இப்போட்டியில் அரைசதம் அடித்த பிலிப் சால்ட் 56 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.