மகளிர் ஆசிய கோப்பை 2022: ஹர்மன்ப்ரீத் தலைமையில் இந்திய அணி அறிவிப்பு!
மகளிர் ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்கேற்கும் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆடவருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் சமீபத்தில் நடைபெற்று முடிந்தது. இத்தொடரில் தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணி, பாகிஸ்தானை வீழ்த்தி 6ஆவது முறையாகக் கோப்பையைக் கைப்பற்றி அசத்தியது.
இந்நிலையில் மகளிருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வங்கதேசத்தில் நடைபெற உள்ளது. அந்நாட்டில் உள்ள சில்ஹெட் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் அனைத்துப் போட்டிகளும் நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், தாய்லாந்து, இலங்கை, மலேசியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் மோதுகின்றன.
இந்நிலையில், மகளிர் ஆசிய கோப்பைக்கான கிரிக்கெட் தொடரின் போட்டி அட்டவணை வெளியாகியுள்ளது. அதன்படி, இத்தொடர் வரும் அக்டோபர் 1ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. மேலும் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியானது அக்டோபர் 7ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதனையடுத்து இத்தொடரில் பங்கேற்கும் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைலையிலான இந்திய மகளிர் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி சர்மா உள்ளிட்ட நட்சத்திர வீராங்கனைகள் இந்த அணியில் இடம்பிடித்துள்ளனர்.
இந்திய அணி: ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா, தீப்தி ஷர்மா, ஷஃபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், சபினேனி மேகனா, ரிச்சா கோஷ், சிநே ராணா, தயாளன் ஹேமலதா, மேகனா சிங், ரேணுகா தாக்கூர், பூஜா வஸ்த்ரகர், ராஜேஸ்வரி கயக்வாட், ராதா யாதவ், கே.பி. நவ்கிரே.
காத்திருப்பு வீரர்கள்: தனியா சப்னா பாட்டியா, சிம்ரன் தில் பகதூர்.
Win Big, Make Your Cricket Tales Now