
ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் 8ஆவது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் முதல் அணியாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
நாளை அடிலெய்ட்டில் நடைபெறும் 2ஆவது அரையிறுதி போட்டியில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதுகிறது. இதில் வெற்றி பெறும் அணி வரும் 13ஆம் தேதி மெல்போர்னில் நடைபெறும் இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது.
இந்த நிலையில் கடந்த 19 வருடங்களில் இந்திய அணி முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி இல்லாமல் நாக் அவுட் எனப்படும் வெளியேற்றுதல் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது இதுவே முதல் முறையாகும். தோனி அணியில் சேர்வதற்கு முன்னதாக கடந்த 2003ஆம் ஆண்டு சவுரவ் கங்குலி தலைமையில் இந்திய அணி ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருந்தது.