
Team India's funny behind-the-scene moments during Asia Cup 2022 photoshoot (Image Source: Google)
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் 15ஆவது சீசன் நாளை முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது. முன்னதாக, இந்திய அணி ஆசியக் கோப்பையை ஏழு முறை வென்றுள்ளது. 2022 ஆசியக் கோப்பைப் போட்டி இலங்கையில் நடைபெறுவதாக இருந்தது.
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி மற்றும் மக்களின் தொடர் போராட்டங்கள் காரணமாக இலங்கைக்குப் பதிலாக ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசிய கோப்பை டி20 போட்டி நடைபெறுகிறது. இதில் ஆகஸ்ட் 28 அன்று இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
இந்திய அணியினர் அனைவரும் துபாய்க்கு சென்று பயிற்சியெடுத்து வருகிறார்கள். இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் இடைக்காலப் பயிற்சியாளராக முன்னாள் வீரர் விவிஎஸ் லக்ஷ்மண் தேர்வாகியுள்ளார்.