
Team India's home season to begin with NZ series and end with T20Is against South Africa (Image Source: Google)
இந்திய அணி நடப்பாண்டு டி20 உலகக்கோப்பைத் தொடருக்கு பிறகு, 2021-22ஆம் ஆண்டில் சொந்த மண்ணில் விளையாடும் போட்டிக்கான அட்டவணையை பிசிசிஐ இன்று வெளியிட்டுள்ளது.
அதன்படி நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு எதிராக இந்திய அணி விளையாட இருக்கிறது.
அதில் நியூசிலாந்துக்கு எதிராக வருகிற நவம்பர் மாதம் 17ஆம் தேதி முதல் டிசம்பர் 3ஆம் தேதி வரை மூன்று டி20 மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி விளையாடுகிறது.