2022ஆம் ஆண்டுக்கான இந்திய அணியின் கிரிக்கெட் அட்டவணை புதுபிப்பு!
2022ஆம் ஆண்டில் இந்திய கிரிக்கெட் அணி பங்கேற்கும் தொடர்களுக்கான புதிய அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு கிரிக்கெட் தொடர்கள் கடந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டது. அதனை பிறகு வைத்து கொள்ளலாம் என்று பிசிசிஐ கூறி இருந்தது. அதற்கு ஏற்றார் போல் தற்போது அட்டவணை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
இதற்காக அடுத்த மாதம் நடைபெற இருந்த நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர், ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான கிரிக்கெட் போட்டி மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் ஆகிய சுற்றுப் பயணத்தை பிசிசிஐ அடுத்த ஆண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதன் படி மாற்றி அமைக்கப்பட்ட புதிய அட்டவணையில் சில தொடர்கள் சேர்க்கப்பட்டுள்ளது.
Trending
மார்ச் மாதம் இலங்கைக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டியில் இந்தியா விளையாடுகிறது. அதன் பிறகு, மே மாதம் வரை ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது,. ஜூன் மாதம் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 5 டி20 போட்டிகள் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.
ஜூலை மாதத்தில் முதல் முறையாக இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் போட்டி நடைபெறும் அதே சமயத்தில் அயர்லாந்துக்கு எதிரான டி20 போட்டியில் மற்றொரு இந்திய அணி விளையாடும். இதனைத் தொடர்ந்து இங்கிலாந்துக்கு எதிராக ஒருநாள், டி20 தொடர் நடைபெறும்.
அதன் பிறகு ஆகஸ்ட் மாதம் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி அங்கு ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. அதன் பின்னர் ஜிம்பாப்வேக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதன் பின்னர் இலங்கையில் ஆசிய கோப்பை டி20 தொடரில் பங்கேற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now