
இந்தியா அணி வீரர்கள் சமீபத்தில் ஐபிஎல் 16ஆவது சீசனில் விளையாடிவிட்டு, அப்படியே டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் விளையாடினார்கள். இதில், 209 ரன்கள் வித்தியாசத்தில் தோற்று, கோப்பையை தவறவிட்டார்கள்.வ்இதனைத் தொடர்ந்து இந்திய அணி, ஆப்கானிஸ்தான் சென்று ஒருநாள் தொடரில் பங்கேற்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஓய்வுக்காக இத்தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதனால், இந்திய அணி வீரர்களுக்கு கிட்டதட்ட ஒரு மாதம் ஓய்வு கிடைத்துள்ளது. ஜூன் 12 முதல் ஜூலை 11 வரை இந்திய வீரர்கள் கிரிக்கெட் விளையாட மாட்டார்கள். இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான டெஸ்ட், ஒருநாள் தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. ஆனால், டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்படாமல் இருந்தது.
இந்நிலையில், டி20 தொடருக்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் சீனியர்களுக்கு இடம் வழங்கப்படவில்லை. கேப்டனாக ஹார்திக் பாண்டியா இடம்பெற்றுள்ளார். துணைக் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் இருக்கிறார்.