
"Team Needs A Leader": Mohammed Shami On India's Next Test Captain (Image Source: Google)
தென்ஆப்பிரிக்க அணியிடம் 2-1 என்ற கணக்கில் இந்திய டெஸ்ட் அணி தோல்வி அடைந்த நிலையில், கேப்டன் பொறுப்பில் இருந்து விராட் கோலி விலகியுள்ளார். இந்நிலையில் அடுத்த இந்திய டெஸ்ட் அணி கேப்டன் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில் புதிய கேப்டன் குறித்து பேசிய இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, “நிச்சயமாக, அணிக்கு (டெஸ்ட் கிரிக்கெட்) ஒரு தலைவர் தேவை. எங்கள் முதல் தொடர் (புதிய கேப்டனின் கீழ்) சொந்த மண்ணில் (அடுத்த மாதம் இலங்கைக்கு எதிராக) நடைபெறுவது நல்லது.
எனவே நிலைமைகளை நன்கு அறிந்திருப்பது ஒருவித நிம்மதியைத் தருகிறது. ஆனால் நீங்கள் என்னைக் கேட்டால், நான் எப்படி விளையாடுகிறேன் மற்றும் ஒட்டுமொத்தமாக பந்துவீச்சு எவ்வாறு செயல்படுகிறது என்பதில் நான் அதிக கவனம் செலுத்துவேன்.