உலகக்கோப்பை 2023: கேப்டன்ஸ் டே மீட்டிங்கில் அசந்து தூங்கிய டெம்பா பவுமா; வைரல் புகைப்படம்!
உலகக் கோப்பைக்கான கேப்டன்ஸ் டே மீட்டிங்கின் போது தென் ஆப்பிரிக்கா கேப்டன் டெம்பா பவுமா நன்றாக அசந்து தூங்கிய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தியா நடத்தும் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நாளை தொடங்குகிறது. அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடக்கும் இந்தப் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்த ஆண்டு உலகக் கோப்பை தொடக்க விழா ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் அனைத்து அணிகளின் கேப்டன்களின் அணி வகுப்பு நிகழ்ச்சி மட்டும் தற்போது நடைபெற்று வருகிறது.
குஜராத் கிரிக்கெட் சங்க கிளப்ஹவுஸின் கேப்டன்களின் அணிவகுப்பு நிழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதில், 10 அணிகளின் கேப்டன்களும் கலந்து கொண்டுள்ளனர். அவர்களிடம் பத்திரிக்கையாளர்கள், கிரிக்கெட் வர்ணனையாளர்கள் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Trending
அதில், ரோஹித் சர்மாவிடம் பத்திரிக்கையாளர் 2019 இல் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து இடையே கோப்பை பகிரப்பட்டிருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா என்று பத்திரிக்கையாளர் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ரோஹித் சர்மா, அது என்னுடைய வேலை இல்லை என்பது போன்று சிரித்துக் கொண்டே பதிலளித்துள்ளார். இதையடுத்து இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லருக்கு, பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் அவருக்கு புரியும் படி இந்த கேள்வியை மொழி பெயர்த்துள்ளார்.
இந்த நிலையில், தான் தென் ஆப்பிரிக்கா அணியின் கேப்டனான டெம்பா பவுமா கண் அசந்து தூங்கியுள்ளார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சிலர், இப்படியொரு கேப்டனை வைத்துக் கொண்டு தென் ஆப்பிரிக்கா அணி என்ன செய்யப் போகிறது என்று விமர்சிக்கத் தொடங்கிவிட்டனர்.
முதல் முறையாக ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி இந்த உலகக் கோப்பையில் விளையாடுகிறது. அதுமட்டுமின்றி மூவர்ண நிறம் கொண்ட ஜெர்சியுடன் இந்திய அணி இந்த உலகக் கோப்பை கிரிக்கெட்டில் விளையாடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கேப்டன்ஸ் டே மீட்டிங்கானது தொலைக்காட்சியிலோ அல்லது ஓடிடி தளத்திலோ ஒளிபரப்பு செய்யப்படவோ லைவ் ஸ்டிரீமிங் செய்யப்படவோ இல்லை.
Win Big, Make Your Cricket Tales Now