உம்ரான் மாலிக்கை சமாளிப்பது கடினம் - டெம்பா பவுமா!
இந்திய வீரர் உம்ரான் மாலிக்கை எப்படி சமாளிப்பது என தெரியவில்லை என தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் பவுமா பதற்றத்துடன் பதில் கொடுத்துள்ளார்.
ஐபிஎல் 15ஆவது சீசன் கிரிக்கெட் போட்டிகள் சமீபத்தில் நடந்து முடிந்தது.இதில் குஜராத் அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதனையடுத்து இந்திய அணி அடுத்ததாக தென் ஆப்பிரிக்காவுடனான டி20 தொடரில் பங்கேற்கிறது.
5 போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடர் வரும் ஜூன் 9ஆம் தேதி முதல் ஜூன் 19ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்காக 18 பேர் கொண்ட இந்திய அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஐபிஎல்-ல் கலக்கிய வேகப்புயல் உம்ரான் மாலிக்கிற்கும் இந்த தொடரில் வாய்ப்பு தரப்பட்டுள்ளது. இதே போன்று தினேஷ் கார்த்திக் மற்றும் ஹர்திக் பாண்டியா போன்றோரும் வாய்ப்பு பெற்றுள்ளது.
Trending
இந்நிலையில் இந்த தொடர் குறித்து தென் ஆப்பிரிக்க கேப்டன் தெம்பா பவுமா பேசியுள்ளார். அதில், “இந்திய அணிக்கு ஒரு மிகப்பெரிய பவுலிங் சொத்தாக உம்ரான் மாலிக் அமைந்துள்ளார். இந்திய அணி இதுபோன்ற வேகப்பந்துவீச்சாளர்களை கண்டறிய ஐபிஎல் பெரிதும் உதவுகிறது. ஆனால் அவரை சமாளிப்பது குறித்து யோசித்து வருகிறோம்.
தென் ஆப்பிரிக்காவில் வேகப்பந்துவீச்சாளர்களை அசால்டாக சமாளிக்கும் வீரர்கள் உள்ளனர். ஆனால் மணிக்கு 150 கிமீ வேகத்தில் வரக்கூடிய பந்தை சமாளிக்க கூடிய பேட்ஸ்மேன் இருக்கிறாரா என்பது சந்தேகம் தான். ஆனால் அதற்காக தயாராவோம்.
எங்கள் அணியிலும் 150 கிமீ வேகத்தில் வீசும் பவுலர்கள் உள்ளனர். ஆனால் உம்ரான் மாலிக் ஒரு ஸ்பெஷல் திறமைசாலி. நிச்சயம் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் அதை கொண்டு வருவார் என நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
காஷ்மீரை சேர்ந்த உம்ரான் மாலிக், நடப்பு ஐபிஎல் தொடரில் தொடர்ச்சியாக 150+ கிமீ வேகத்தில் பந்துவீசி அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தினார். 155+ கூட அவர் எட்டியுள்ளார் என்பது தான் ஆச்சரியம். வேகத்தில் சற்று வேரியஷங்களை கற்றுக்கொண்டால் உலகின் நம்.1 பவுலராக இவர் வருவார் என முன்னாள் வீரர்கள் பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now