
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சென்சூரியன் நகரில் நடைபெற்று முதல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா போராடி 245 ரன்கள் எடுத்தது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் இப்போட்டியில் கேப்டன் ரோஹித் சர்மா 17, ஜெய்ஷவால் 17, ஷுப்மன் கில் 2 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.
அப்போது மிடில் ஆர்டரரில் நிதானமாக விளையாட முயற்சித்த விராட் கோலி 38, ஸ்ரேயாஸ் ஐயர் 31 ரன்களில் அவுட்டானார்கள். அதனால் 107/5 என தடுமாறிய இந்தியா 200 ரன்கள் தாண்டாது என்று எதிர்பார்க்கப்பட்ட போது மிடில் ஆர்டரில் சிறப்பாக விளையாடிய கேஎல் ராகுல் தென் ஆப்பிரிக்க பவுலர்களுக்கு சவாலாக மாறி 14 பவுண்டரி 4 சிக்சருடன் சதமடித்து 101 ரன்கள் குவித்தார்.
அந்த வகையில் பேட்டிங்க்கு சவாலான மைதானத்தில் மற்ற வீரர்கள் 50 ரன்கள் கூட தாண்டாத நிலையில் தனி ஒருவனாக சதமடித்த ஓரளவு தன்னுடைய அணியை காப்பாற்றிய அவர் தென் ஆப்ப்பிரிக்க மண்ணில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையும் படைத்தார். மறுபுறம் தென் ஆப்பிரிக்கா சார்பில் அதிகபட்சமாக ககிசோ ரபாடா 5 விக்கெட்கள் எடுத்து அசத்தினார்.