உலகின் மிகச்சிறந்த டெஸ்ட் அணி இந்தியா தான் - வார்னே புகழாரம்!
கடந்த 12 மாதங்களில் மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி மகத்தான சாதனையை இந்திய அணி படைத்திருக்கிறது என ஆஸ்திரேலியாவின் முன்னாள் ஜாம்பவான் ஷேன் வார்னே தெரிவித்துள்ளார்.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிரது. இதுவரை முடிந்த 4 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 5ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகிற 10ஆம் தேதி மான்செஸ்டரில் தொடங்குகிறது. இதனால் இத்தொடரை கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் உள்ளனர்.
Trending
இந்நிலையில் ஓவல் மைதானத்தில் இந்தியா பெற்ற வெற்றியை ஆஸ்திரேலிய முன்னாள் ஜாம்பவான் ஷேன் வார்னே வெகுவாக பாராட்டி உள்ளார்.
இது குறித்து ஷேன் வர்னே தனது ட்விட்டர் பதில்,“விராட் கோலி மற்றும் ஒட்டுமொத்த இந்திய அணிக்கு எனது பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன். மற்றொரு அற்புதமான வெற்றியை இந்தியா பெற்றுள்ளது. கடந்த 12 மாதங்களில் மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி மகத்தான சாதனையை இந்திய அணி படைத்திருக்கிறது.உலகின் சிறந்த டெஸ்ட் அணி இந்தியாதான் என்று என்னால் தெளிவாக சொல்ல முடியும். இந்த பட்டத்தை உங்களுக்கு (இந்தியா) மட்டுமே தர முடியும்” என்று பராட்டி பதிவிட்டுள்ளார்.
Also Read: மதியம் பாகிஸ்தான் அணி அறிவிப்பு; மாலை பயிற்சியாளர்கள் ராஜினாமா - தொடரும் குழப்பத்தில் பிசிபி!
இந்திய அணி சமீபத்தில் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின்போது டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது. தற்போது இங்கிலாந்துக்கு எதிராக அந்நாட்டில் நடைபெறும் டெஸ்ட் தொடரையும் இந்தியா கைப்பற்ற நல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now