Advertisement

போட்டியின் தொடக்கம் எவ்வளவு முக்கியம் என்று தெரியும் - ரோஹித் சர்மா!

ஒவால் டெஸ்ட் போட்டியில் சதமடித்தது எனது வாழ்வின் முகவும் ஸ்பெஷலான ஒன்று என இந்திய அணி வீரர் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan September 07, 2021 • 13:56 PM
'That was special': Rohit Sharma on his first overseas hundred
'That was special': Rohit Sharma on his first overseas hundred (Image Source: Google)
Advertisement

இந்தியா -ன்இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று முடிந்த நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தற்போது 2-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. 

இந்த போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக துவக்க வீரர் ரோஹித் சர்மா திகழ்ந்தார். முதல் இன்னிங்சில் 11 ரன்கள் மட்டுமே அடித்து இருந்தாலும், இரண்டாவது இன்னிங்சில் 256 பந்துகளை சந்தித்து 14 பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் என 127 ரன்கள் குவித்து அசத்தினார்.

Trending


இந்நிலையில் போட்டி முடிந்து தான் விளையாடியது பேசிய ரோகித் சர்மா, “என்னால் எவ்வளவு நேரம் பேட்டிங் செய்ய முடியுமோ அவ்வளவு நேரம் பேட்டிங் செய்ய நினைத்தேன். அதே போன்று இந்த சதம் கிடைத்தது மிகவும் ஸ்பெஷலானது. அதுமட்டுமின்றி போட்டியின் இந்த இரண்டாவது இன்னிங்ஸ் எவ்வளவு முக்கியம் என்பதை நாங்கள் உணர்ந்து இருந்தோம்.

ஒரு அணியாக நாங்கள் செயல்பட்டது திருப்தி அளிக்கிறது. என்னுடைய முதல் வெளிநாட்டு சதம் இதுதான். அதுவும் அணிக்கு தேவையான நேரத்தில் மிகவும் முக்கியமான ஒரு இடத்தில் இந்த சதம் வந்துள்ளது. ஆரம்பத்தில் நான் சதம் அடிப்பது குறித்து யோசிக்கவே இல்லை. ஆனால் அணியின் ரன் குவிப்பிற்கு நிச்சயம் என்னுடைய இந்த இன்னிங்ஸ் உதவியது மகிழ்ச்சி அளிக்கிறது. நாங்கள் இரண்டாவது இன்னிங்சின் போது முன்னிலை பெற்றதும் பவுலர்களின் மீது அழுத்தத்தை கொடுக்க நினைத்தோம்.

Also Read: மதியம் பாகிஸ்தான் அணி அறிவிப்பு; மாலை பயிற்சியாளர்கள் ராஜினாமா - தொடரும் குழப்பத்தில் பிசிபி!

அந்த வகையில் நான் இந்திய அணிக்கு பங்களித்தது மிகவும் மகிழ்ச்சி. ஒரு போட்டியின் துவக்கம் என்பது எவ்வளவு முக்கியம் என்பது எனக்கு தெரியும். அந்த வகையில் நான் இந்த போட்டியில் எனது சரியான பங்களிப்பை அளித்து உள்ளேன். நிச்சயம் இந்த சிறப்பான ஆட்டத்தை அடுத்த போட்டிக்கும் கொண்டு செல்வேன்” என தெரிவித்துள்ளார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement