
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் லக்னோ மற்றும் ஆர்சிபி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் ஆர்சிபி அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று. இந்நிலையில் இந்த வெற்றியைத் தாண்டி நேற்று மைதானத்தில் நடந்த சில சம்பவங்கள் தான் தற்போது இணையத்தை ஆக்கிரமித்துள்ளது.
இதில், விராட் கோலியும் கௌதம் கம்பீரும் மோதிக்கொண்ட சம்பவம் குறித்து நாம் ஏற்கனவே பார்த்தோம். ஆனால் விராட் கோலி சும்மாக இந்த சண்டையை தொடங்கவில்லை. பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தின் போது ஆர் சி பி அணியை லக்னோ அணி வீழ்த்தியது. அப்போது ஆர் சி பி ரசிகர்களை வாயை மூடுங்கள் என்று கம்பீர் செய்கை செய்தார்.
மேலும் வெற்றி கொண்டாட்டத்தில் லக்னோ வீரர்கள் எல்லை மீறி நடந்து கொண்டார்கள். இதற்கு பதில் அளி கொடுக்கும் விதமாகத்தான் நேற்று விராட் கோலி களத்தில் கம்பீர் செய்த அதே செய்கையை திருப்பி செய்தார். மேலும் நிக்கோலஸ் பூரான் வெற்றி பெற்றவுடன் செய்த கொண்டாட்டத்தை மீண்டும் நேற்று களத்தில் கேட்ச் பிடித்த விராட் கோலி லக்னோ அணி வீரர்களை பார்த்து செய்தார்.