சொந்த மண்ணில் தொடரை வெல்ல வேண்டியது அவசியம் - ஜோஷ் ஹேசில்வுட்!
இந்த முறை பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரை சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா கைப்பற்ற வேண்டும் என அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே பாரம்பரியமாக நடைபெற்று வரும் பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர், இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கிறது. அதன்படி மொத்தம் 5 போட்டிகள் கொண்ட இத்தொடரானது நவம்பர் மாத இறுதியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் இத்தொடருக்கான இடம், தேதி ஆகியவற்றை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அறிவித்தது.
அதன்படி, பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் முதல்முறையாக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நேருக்கு நேர் மோதவுள்ளனர். அதிலும் குறிப்பாக இத்தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக நடைபெறும் என்று ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் அறிவித்திருந்தது. மேலும் இப்போட்டிக்காக இந்திய அணி இரண்டு பகலிரவு பயிற்சி போட்டிகளிலும் விளையாடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Trending
மேற்கொண்டு பெர்த் மைதானத்தில் தொடரின் முதல் போட்டி நடைபெறும் என்று, இரண்டாவது டெஸ்ட் போட்டி பலிரவு ஆட்டமாக அடிலெய்டிலும், மூன்றாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனிலும் நடைபெறவுள்ளது. அதேசமயம் ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியானது மெல்போர்னிலும், கடைசி போட்டியானது புத்தாண்டு டெஸ்ட் போட்டியாக சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் என்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
மேலும் இத்தொடரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் அங்கமாக நடைபெற இருப்பதால், இதில் எந்த அணி வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் முன்னிலைப் பெறும் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. மேலும் இந்திய அணி கடைசியாக ஆஸ்திரேலியாவில் விளையாடிய இரண்டு பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரையும் வென்று அசத்தியுள்ளதால், மூன்றாவது முறையாகவும் இத்தொடரை கைப்பற்றி சாதனை படைக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில், இந்த முறை பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரை சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா கைப்பற்ற வேண்டும் என அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “இந்தியாவை இதுவரை டெஸ்ட் தொடரில் வீழ்த்தாத சில வீரர்கள் உள்ளனர். ஆனால் அப்படி சொல்வது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. இது நாம் கண்டிப்பாக, குறிப்பாக, சொந்த மண்ணில் வெல்ல வேண்டியது அவசியமான ஒன்றாகும்.
Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy
மேலும் இந்தியாவிற்கு எதிரான கடைசித் தொடரின் போது அடிலெய்டில் நாங்கள் அவர்களை 36 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கினோம். அதனால் இந்த முறையும் நாங்கள் சொந்த மைதானங்களில் விளையாடவுள்ளதன் காரணமாக மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறோம். மேலும் கடைசி டெஸ்டில் நாங்கள் இந்தியா பி அணியுடன் விளையாடி தோல்வியடைந்தோம் என்று மக்கள் கூறுகிறார்கள், ஆனால் அவர்கள் சில நேரங்களில் சிறந்த அணியை விட பலமாக இருந்தனர்” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now