Ashes 2023: ஓய்வு முடிவை திரும்ப பெற்ற மொயீன் அலி; இங்கிலாந்து அணியில் சேர்ப்பு!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற இங்கிலாந்து அணியின் ஆல்-ரவுண்டர் மொயீன் அலி, தனது முடிவை திரும்பப் பெற்றுள்ளார்.
இங்கிலாந்து லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று தொடங்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி முடிந்தவுடன் இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் ஆஷஸ் கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. கிரிக்கெட் வரலாற்றில் இந்த தொடர் மிகவும் முக்கியமான தொடராக கருதப்படும். இதனால் இந்த தொடரை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என இங்கிலாந்து அணி முனைப்புடன் உள்ளது.
ஆஸ்திரேலிய அணிக்கு நாதன் லைன் என்ற சிறந்த சுழற் பந்துவீச்சாளர் உள்ளார். அதேபோல் இங்கிலாந்து அணியில் மொயீன் அலி இருந்து வந்தார். அவர் ஒயிட்பால் கிரிக்கெட்டில் ஆர்வம் செலுத்துவதற்காக கடந்த 2021 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் இருந்து விலகினார். இது இங்கிலாந்து அணிக்கு ஒரு பெரிய இழப்பாகவே இருந்து வந்தது.
Trending
இந்நிலையில், இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மற்றும் பயிற்சியாளர் மெக்கலமுடன் நடத்திய ஆலோசனைக்கு பிறகு மொயின் அலி, தனது முடிவை திரும்பப் பெறுவதாக தெரிவித்ததாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
மேலும், ஜூன் 16ஆம் தேதி நடைபெறவுள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் தொடரிலும் மொயின் அலி சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆல்-ரவுண்டர் மொயின் அலியின் வருகை இங்கிலாந்து அணிக்கு பலம் சேர்த்துள்ளது.
இதுவரை 64 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள மொயீன் அலி 5 சதம் மற்றும் 14 அரைசதங்கள் என 2914 ரன்களைச் சேர்த்துள்ளார். அதேசமயம் பந்துவீச்சில் 5 முறை ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றியதுடன், 195 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now