பிசிசிஐ கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள்!
இந்திய கிரிக்கெட் கட்டுப்பட்டு வாரியத்தின் கவுன்சில் கூட்டத்தின் முடிவில் பல்வேறு முடிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளடது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அதன் 19ஆவது உச்ச கவுன்சில் கூட்டத்தில், இந்தாண்டு செப்டம்பரில் சீனாவின் ஹாங்சோவில் நடைபெற உள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க ஆண்கள் மற்றும் பெண்கள் கிரிக்கெட் அணிகளை அனுப்ப முடிவு செய்துள்ளது. ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், இரண்டாவது வரிசை ஆண்கள் அணியை அனுப்ப கிரிக்கெட் நிர்வாகக் குழு அறிவித்துள்ளது.
இருப்பினும் கூட, மகளிர் அணி முழு பலத்துடன் அனுப்பப்படுவதாக கூறப்பட்டுள்ளது. "2023 ஆம் ஆண்டுக்கான ஐசிசி ஆடவர் உலகக் கோப்பையுடன் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சேர்ந்து வருவதால், உலகக் கோப்பையில் பங்கேற்காத வீரர்களில் இருந்து ஒரு அணியை தேர்வு செய்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் விளையாட பிசிசிஐ அனுப்பும்" என்று பிசிசிஐ இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
Trending
"திறமையான திட்டமிடல், தகவல் தொடர்பு மற்றும் ஒருங்கிணைப்பு மூலம், பிசிசிஐ அந்த சவால்களை வெற்றிகரமாக வழிநடத்தி, இந்திய அரசாங்கத்தின் வழிகாட்டுதலின்படி ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் ஒரு அணியை களமிறக்குவதன் மூலம் தேசிய நோக்கத்திற்கு பங்களிக்கும்," என்று வாரியம் தெரிவித்துள்ளது.
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2023 செப்டம்பர் 23ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 8 ஆம் தேதி முடிவடையும். ஆசிய விளையாட்டு போட்டியில், இந்திய கிரிக்கெட் அணி பங்கேற்பது இதுவே முதல் முறை என்றாலும், 2010 மற்றும் 2014 ஆசிய விளையாட்டுகளில் இரண்டு முறை கிரிக்கெட் ஒரு விளையாட்டாக இடம்பெற்றுள்ளது. டி20 வடிவத்தில் விளையாடப்படும் ஆசிய விளையாட்டு கிரிக்கெட்டுக்கு சர்வதேச கிரிக்கெட் வாரியமான சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) சர்வதேச அந்தஸ்து வழங்கியுள்ளது.
ஆடவருக்கான போட்டியில், வங்கதேசம் 2010 இல் முதல் பதிப்பில் சாம்பியன் பட்டம் வென்றது, அதே சமயம் 2014 இல் ஆசிய விளையாட்டு கிரிக்கெட்டில் இலங்கை வெற்றி பெற்றது. பெண்கள் போட்டியில், பாகிஸ்தான் அணி விளையாடிய இரண்டு சீசனிலும் வென்றது. ஆசிய விளையாட்டு போட்டிகள் மட்டுமின்றி, வெளிநாட்டு லீக்குகளில் இந்திய வீரர்கள் பங்கேற்பது குறித்து பிசிசிஐ இந்த கருத்தரங்கில் விவாதித்துள்ளது. மும்பையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில், வெளிநாட்டு டி20 லீக்குகளில் பங்கேற்பது தொடர்பாக அதன் வீரர்களுக்கு (ஓய்வு பெற்ற வீரர்கள் உட்பட) கொள்கையை உருவாக்குவது உள்ளிட்ட பிற முக்கிய முடிவுகளை பிசிசிஐ எடுத்தது.
தென் ஆப்பிரிக்க டி20 லீக் அல்லது சமீபத்திய மேஜர் லீக் கிரிக்கெட் போன்ற இந்தியன் பிரீமியர் லீக்கின் அணி முதலீட்டாளர்களின் ஆதரவுடன் பல வெளிநாட்டு கிரிக்கெட் லீக்குகள் தோன்றியுள்ள நிலையில், இந்திய வீரர்கள் இந்தியாவுக்காக விளையாட முடியாமல் போகும் வாய்ப்புள்ளது என்பதால் இந்த முடிவு முக்கியமானதாக அமைகிறது. இந்தியன் பிரீமியர் லீக் உட்பட கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களிலும் ஓய்வு அறிவிக்கும் வரை இந்திய கிரிக்கெட் வீரர்கள் வெளிநாட்டு லீக்குகளில் பங்கேற்க பிசிசிஐ அனுமதிப்பதில்லை.
சமீபத்திய, அம்பதி ராயுடு, அவரது சமீபத்திய ஓய்வுக்குப் பிறகு, அமெரிக்காவின் எம்.எல்.சி.யின் ஒரு பகுதியாக மாறியுள்ளார், கடந்த காலங்களில் யுவராஜ் சிங், உன்முக்த் சந்த் மற்றும் ராபின் உத்தபா போன்ற வீரர்கள் வெளிநாட்டுப் போட்டிகளில் இடம்பெற்றுள்ளனர். பிசிசிஐ கூட்டத்தில் மற்றொரு முக்கிய முடிவு, இரண்டு கட்டங்களாக நடைபெறும் நாட்டில் உள்ள மைதானங்களை மேம்படுத்தும் திட்டம். முதல் கட்டமாக ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை 2023 நடைபெறும் இடங்களின் தரம் உயர்த்தப்படும், அதற்கான பணிகள் உலகக் கோப்பை தொடங்கும் முன் முடிக்கப்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹைதராபாத், அகமதாபாத், தர்மசாலா, டெல்லி, சென்னை, லக்னோ, புனே, பெங்களூரு, மும்பை மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்களில் போட்டி நடைபெற உள்ளது. இரண்டாம் கட்டமாக மீதமுள்ள இடங்களையும் மேம்படுத்தும். சையத் முஷ்டாக் அலி டிராபியில் இம்பாக்ட் பிளேயர் விதி ஏற்கனவே இருந்தாலும் அதிலிருந்து சில மாறுதல்களை மேற்கொண்டு, ஐபிஎல் இல் பயன்படுத்தப்பட்ட விதியையும் மாற்றி, தொடர பிசிசிஐ முடிவு செய்துள்ளது.
முதலில், அணிகள் டாஸ் செய்வதற்கு முன் 4 மாற்று வீரர்களுடன் தங்கள் விளையாடும் லெவனை தேர்வு செய்ய வேண்டும். இரண்டாவதாக, போட்டியின் போது எந்த நேரத்திலும் அணிகள் இம்பாக்ட் பிளேயரைப் பயன்படுத்தலாம் என்று கூறப்பட்டுள்ளது. வரும் சையத் முஷ்டாக் அலி டிராபியில் பேட் மற்றும் பந்திற்கு இடையேயான போட்டியை சமன் செய்வதற்காக ஓவருக்கு இரண்டு பவுன்சர்கள் வரை வீசும் விதியை அறிமுகப்படுத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now