
ஐபிஎல் 2023 ஆம் ஆண்டு சீசன் தொடரின் 3வது லீக் ஆட்டத்தில் டெல்லி அணியும், லக்னோ அணிகளும் பலப்பரீட்சை நடத்தியது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீசி வருகிறது. டெல்லி அணிக்கு கேப்டனாக இருந்த ரிஷப் பந்த், கடந்த ஆண்டு இறுதியில் கார் விபத்தில் சிக்கினார்.
இதில் ரிஷப் பந்த பிழைத்ததே அதிர்ஷ்டம் என்ற அளவுக்கு இருந்தது. ரிஷப் பந்த் கிரிக்கெட் போட்டிக்கு திரும்பவே ஒரு ஆண்டு ஆகும் என்ற தகவல் வெளியானது. இதனையடுத்து ரிஷப் பந்துக்கு பதிலாக கேப்டனாக வார்னர் நியமிக்கப்பட்டார்.
ரிஷப் பந்த்க்கு தங்களது ஆதரவை தெரிவிக்கும் வகையில் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் ஒரு நெகிழ்ச்சியான சம்பவத்தை செய்துள்ளார். அதன் படி வீரர்கள் அமர்ந்து இருக்கும் டக் அவுட்டில் ரிஷப் பந்தின் ஜெர்சியை மேலே தொங்கவிட்டு, நீ எப்போது எங்கள் மனதில் இருக்கிறாய் என்பதை உணர்த்தும் வகையில் செய்து இருக்கிறார்.