
நியூசிலாந்து - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான உலககோப்பை கிரிக்கெட் தொடரின் 16ஆவது லீக் போட்டியானது நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டிகள் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய நியூசிலாந்து அணியானது 149 ரன்கள் வித்தியாசத்தில் ஆஃப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி தங்களது நான்காவது வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு சென்றது.
அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய நியூசிலாந்து அணியானது நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 288 ரன்களை குவித்தது.
நியூசிலாந்து அணி சார்பாக அதிகபட்சமாக கிளென் பிலிப்ஸ் 71 ரன்களையும், டாம் லேதம் 68 ரன்களையும் குவித்து அசத்தினர். பின்னர் 289 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணியானது 34.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 139 ரன்களை மட்டுமே குவித்தது. இதன் காரணமாக நியூசிலாந்து அணி 149 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.