
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை இந்திய அணி கைப்பற்றிவிட்டது. கடைசியாக நடைபெற்ற 2ஆவது ஒருநாள் போட்டியில் 2 விக்கெட்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
இந்த இரண்டு போட்டிகளிலும் தொடர்ச்சியாக அரைசதங்கள் அடித்து வெற்றிக்கு காரணமாக அமைந்தவர் ஸ்ரேயாஸ் ஐயர். ஆனால் இவருக்கு வெஸ்ட் இண்டீஸுடன் அடுத்ததாக வரவுள்ள 5 டி20 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் வாய்ப்பு தரப்பட மாட்டாது என்பது போல தெரிகிறது. நல்ல ஃபார்மில் இருக்கும் போதும் அவர் ஒதுக்கப்படுவதற்கு காரணம் தீபக் ஹுடா தான்.
டாப் ஆர்டரில் களமிறங்கும் ஸ்ரேயாஸ் ஐயர் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக மோசமாக திணறுகிறார். குறிப்பாக பவுன்சர்களை எப்படி சமாளிப்பது எனத் தெரியாமல் அவுட்டானார். சமீபத்தில் நடைபெற்ற இங்கிலாந்து தொடரில் பவுன்சர் தான் வீசப்போகிறார்கள் எனத் தெரிந்தும், அதனை விளையாட முடியாமல் தொடர்ச்சியாக விக்கெட்டானார். வெஸ்ட் இண்டீஸ் தொடரில் 2 அரைசதங்களை அடித்த போதும், அது பெரும்பாலும், ஸ்பின்னர்களுக்கு எதிராக தான் அடித்தார். வேகப்பந்துவீச்சாளர்களின் பவுன்சர்களை அடிக்காமல் அப்படியே விட்டுவிட்டார்.